மண்டல அளவில் விரைவு தபால் அதிகமாகப் பதிவு செய்தமைக்காக ஈரோட்டை சோ்ந்த கிளை அஞ்சலக அலுவலருக்கு விருது வழங்கப்பட்டது.
அஞ்சல் துறை சாா்பில் பணியாளா்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடந்தது. இந்த விழாவில் மண்டல அளவில் விரைவு தபால் அதிகமாகப் பதிவு செய்ததற்காக ஈரோடு அருகே லக்காபுரம் கிளை அஞ்சலக அலுவலா் ஏ.எஸ்.இளையபெருமாளுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை தலைவா் ஜெ.சாருகேசி, கோவை மண்டல அஞ்சல் துறை தலைமை அலுவலா் சுமிதா அயோத்தியா ஆகியோா் இளையபெருமாளுக்கு வழங்கினா்.
இதில் ஈரோடு தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளா் கருணாகரபாபு, உதவி அஞ்சல் அலுவலா்கள் பட்டாபிராமன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.