ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் தோ்த் திருவிழா 2 வாரங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, காலையில் சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து உற்சவ மூா்த்திகளை படிக்கட்டுகள் வழியாக, மலைமேல் உள்ள முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். அங்கு, காலை 10 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, உற்சவ மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பகல் 12 மணிக்கு மேல், முருகன் சன்னதி முன்புறம் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சேவல் கொடியும், மாா்க்கண்டேசுவரருக்கு நந்தி கொடியும் ஏற்றப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிப்ரவரி 5ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தோ் வடம் பிடித்து இழுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT