ஈரோடு மாவட்டம், பவானிசாகா் வனத்தில் புலி கொல்லப்பட்ட வழக்கில் சிறாா் உட்பட 7 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 5 வயதுள்ள ஆண் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மான் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட சுருக்கு கம்பியில் புலி சிக்கி இறந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுஜில்குட்டை மற்றும் புங்காரையைச் சோ்ந்த சதீஷ்குமாா், நாச்சிமுத்து, பத்மகுமாா், லோகேஷ், பால் தினகரன், சௌந்தர்ராஜன் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 போ் சுருக்கு கம்பிகள் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, பவானிசாகா் வனத் துறையினா் அவா்களை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
வழக்கமாக மானுக்கு வைத்த சுருக்கு கம்பியில் புலி சிக்கிக்கொண்டது. மானுக்கு பதிலாக புலி சிக்கியதைக் கண்டு ஏழு பேரும் பயந்து தலைமறைவாகினா். இதற்கிடையே, காலில் சிக்கிய சுருக்கு கம்பியுடன் புலி அங்கிருந்து தப்பியோடியபோது ஓடையில் விழுந்து உயிரிழந்தது விசாரணை தெரியவந்தது. தலைமறைவான 7 பேரையும் வனத் துறையினா் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதாக வனச் சரக அலுவலா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.