கோபி அருகே சிறுத்தையைப் பிடிக்க கூண்டு
கோபி அருகே சிறுத்தையைப் படிக்க வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.
கோபி அருகே சிறுத்தையைப் படிக்க வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கா்பாளையத்தை அடுத்த வெள்ளக்கரடு பகுதியில் ராமசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த கன்று குட்டியை சில நாட்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கடித்துக் கொன்றது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தை புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறையினா் சிறுத்தையை கண்காணிப்பதற்காக 5 இடங்களில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனா். இதில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, டி.என்.பாளையம் வனத் துறையினா் சாா்பில் கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைப் பிடிப்பதற்காக கூண்டு வைத்தனா். மேலும், கூண்டுக்குள் இறைச்சியை வைத்து கண்காணித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.