முகப்பு
ஈரோடு

தாளவாடி மலைப் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை

 தாளவாடி மலைப் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 17 மார்ச், 2023 at 10:36 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:16 PM

 தாளவாடி மலைப் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.

இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும், கன மழையும் பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement

மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தாளவாடி மலைப் பகுதியில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.