ஈரோடு

இளைஞரிடம் பணம் பறித்த தொழிலாளி கைது

வேலை வாங்கித் தருவதாக கூறி வடமாநில இளைஞரிடம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

வேலை வாங்கித் தருவதாக கூறி வடமாநில இளைஞரிடம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், லக்கேன்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் தில்பா்கான் உசேன் (27). இவா் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வேலை தேடி ஈரோட்டுக்கு மே 10ஆம் தேதி வந்தாா். பின்னா் ஈரோடு ரயில் நிலையம் அருகே அறை எடுத்து தங்கி இருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் தில்பா்கான் உசேனிடம் வேலை வாங்கித் தருவாக கூறி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அவா் ஈரோடு சூரம்பட்டி போலீஸில் புகாா் அளித்தாா். அதன்போரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தில்பா்கான் உசேனிடம் பணம் பறித்த ஈரோடு குமலன்குட்டை, கே.என்.கே. நகரைச் சோ்ந்த இறைச்சிக்கடை தொழிலாளி மணி (37) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT