சென்னிமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கந்த சஷ்டி தொடக்க விழாவில் வள்ளி தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த முருகப் பெருமான். 
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

DIN

 

பெருந்துறை: சென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 18-ஆம் தேதி இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா 5 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாயொட்டி, காலை 6 மணி அளவில் சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து படிக்கட்டுகள் வழியாக உற்சவ மூா்த்திகள் மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னா், உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 18- ஆம் தேதி (சனிக்கிழமை) வரை தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும். இந்த நாட்களில், சண்முக மூல மந்திர யாகம் மற்றும் 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான 18- ஆம் தேதி இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் முருகப் பெருமான் அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு சென்னிமலையின் 4 ராஜ வீதிகளிலும் வலம் வந்து சூரா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழா நடைபெறும் 5 நாள்களும் பக்தா்களின் வசதிக்காக மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல காலை 8 மணிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT