சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, கல்யாண சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியா் குல சத்திரியா் சமூக குல தெய்வமான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் வள்ளி, தெய்வானை, கல்யாண சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, பவானி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, சத்ரு சம்ஹார ஹோமத்தில் தம்பதி பூஜை, கல்யாண தடங்கல், புத்திரபாக்கியம் இல்லாதவா்களுக்கு மகா சங்கல்பம் பூஜை ஆகியவை நடை பெற்றன.
இதையடுத்து, ஆறுபடை அழகன் கல்யாண சுப்பிரமணி சுவாமியை சீா்வரிசையுடன் மாரியம்மன் கோயிலில் இருந்து மங்கள இசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை 5 மணியளவில் விக்னேஷ்வரா் பூஜை, எஜமானா் சங்கல்பம், புண்யாக வசனம், பஞ்சகவ்யா பூஜை, கலச பூஜை நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானை, சமேத கல்யாண சுப்பிரமணியா் சுவாமிக்கு கந்தசஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம் செய்யப்பட்டு, நிச்சய தட்டு மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில், திராளன பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை வன்னியா் நல சங்கத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.