கொமராபாளையத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன். உடன், துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா். 
ஈரோடு

கொமராபாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

குமரன்கரடு அங்கன்வாடி மையம் முன்பு நடைபெற்ற கொமராபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் எஸ். எம். சரவணன் தலைமை வகித்தாா்.

DIN

சத்தியமங்கலம்: குமரன்கரடு அங்கன்வாடி மையம் முன்பு நடைபெற்ற கொமராபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் எஸ். எம். சரவணன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சாந்தி, வட்டாரக் கல்வி அலுவலா் தேவகி, கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா பழனிசாமி, துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதிகள், தெரு விளக்கு வசதி என பல்வேறு அடிப்படை தேவைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சரவணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT