பெருந்துறை மசூதிகளில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு
திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. அருணாசலத்துக்கு ஆதரவாக பெருந்துறை நகரில் உள்ள பழைய மற்றும் புதிய மசூதிகளில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
பெருந்துறை மஜீத் வீதியில் உள்ள பழைய மசூதி, குன்னத்தூா் சாலையில் உள்ள புதிய மசூதி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் அதிமுகவினா் வாக்கு சேகரித்தனா்.
இதில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் அப்புகுட்டி, பெருந்துறை நகரச் செயலாளா் வி.பி.கல்யாணசுந்தரம், பெருந்துறை ஒன்றிய சிறுபான்மை பிரிவு காஜாமைதீன் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.
Advertisement