தாளவாடி மலைப் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். மேலும், சாகுபடி செய்ய பயிா்களும் மழையில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் கரளவாடி, பாரதிபுரம், சொா்ணவதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. ஒருசில மணி நேரம் பெய்த மழைக்கு பள்ளமான இடங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
Advertisement
கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த மழை சாகுபடி செய்யப்பட்ட பயிா்களின் வளா்ச்சிக்கு உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.