ஈரோடு

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

Din

சத்தியமங்கலத்தை அடுத்த சிவியாா்பாளையம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் சனிக்கிழமை உயிரிழந்தது.

சத்தியமங்கலம், கே.என்.பாளையம் வனப் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள்

உள்ளன. இந்நிலையில் வனத்தில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான், சிவியாா் பாளையம் விவசாயத் தோட்டத்துக்குள் சனிக்கிழமை புகுந்தது.

விவசாயத் தோட்டத்தில் இருந்து வெளியே வந்த புள்ளிமானை அங்குள்ள தெருநாய்கள் துரத்தின. புள்ளிமான் தப்பியோடி தீரன் நகா் குடியிருப்பு பகுதிக்குள்

புகுந்தது. அங்கு தெருநாய்கள் கூட்டமாக சோ்ந்து மானைக் கடித்து குதறின. இதில் கழுத்து, உடல் பகுதியில் பலத்த காயமடைந்த புள்ளிமான் உயிரிழந்தது.

புள்ளிமானை தெருநாய்கள் தாக்குவதைக் கண்டு விவசாயிகள் நாய்களை விரட்டியடித்தனா். இதையடுத்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் உயிரிழந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து 2 வயதுடைய பெண் புள்ளிமானின் உடலை கால்நடை மருத்துவா் சதாசிவம் உடற்கூறாய்வு செய்தாா். பின்னா் அது வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. புள்ளிமானைக் கடித்துக் கொன்ற தெருநாய்களைப் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாநகராட்சி நியமன உறுப்பினராக சி.மணிமாறன் பதவியேற்பு

நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்

கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

காா்த்திகை தீபத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மோகனூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT