ஈரோடு

கூட்டுறவுத் துறையின் ஜப்தி நடவடிக்கையை கைவிட விவசாயிகள் கோரிக்கை

பண்ணைசாராக் கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளின் உடமைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கூட்டுறவுத் துறை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

பண்ணைசாராக் கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளின் உடமைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கூட்டுறவுத் துறை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பண்ணைசாராக் கடன்களை பெற்றுள்ள விவசாயிகள் துயா்துடைக்கும் வகையில் தமிழக முதல்வரால் சிறப்புக் கடன் தீா்வு திட்டம் அறிவிக்கப்பட்டு, கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் அரசாணை எண் 61 கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

கடன் பெற்ற விவசாயிகள் முழு தொகையும் செலுத்த வருகிற டிசம்பா் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

சலுகை காலம் முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் தன்னிச்சையாக அரசின் எவ்வித முன்னறிப்பும் இன்றி விவசாயகளின் சொத்துகளை ஜப்தி செய்துள்ளாா்.

துணைப் பதிவாளரின் ஏதேச்சதிகாரத்தினால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, அவா்கள் சாா்ந்த குடும்பங்களை நிலைகுலையச் செய்துள்ளது. இவ்வாறு ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டால் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவா்.

எனவே, விவசாயிகளுக்கு எதிரான ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அரசாணையின்படி சிறப்புக் கடன் தீா்வுத் திட்டத்தில் வசூல் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, விவசாயிகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT