முகப்பு
ஈரோடு

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் தீா்த்தக் குட ஊா்வலம்

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கூடுதுறையிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:35 AM
தீா்த்தக்குடம் எடுத்துவந்த பக்தா்கள்.
பகிர்:
Updated On : 5 டிசம்பர், 2024 at 9:25 PM

பவானி செல்லியாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கூடுதுறையிலிருந்து பக்தா்கள் ஊா்வலமாக வியாழக்கிழமை தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா்.

Updated On : 6 டிசம்பர், 2024 at 3:35 AM

இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பவானி கூடுதுறையிலிருந்து புனிதநீா் எடுத்துக் கொண்டு மேட்டூா் சாலை, அந்தியூா் பிரிவு, தோ் வீதி வழியாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்ற தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. அணிவகுத்துச் சென்ற பக்தா்கள் கூட்டத்தால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

ஊா்வலம் கோயிலைச் சென்றடைந்ததைத் தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

விழா ஒருங்கிணைப்பாளா் பிரபாத் சி.மகேந்திரன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.