முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ. 2.65 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.65 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 2:05 AM
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 5:49 PM

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.65 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,459 மூட்டைகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 2:05 AM

இதில், முதல்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.118.91-க்கும், அதிகபட்சமாக ரூ.138.15- க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.17. 60-க்கும், அதிகபட்சமாக ரூ.139.49-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 2 கோடியே 65 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

Advertisement