முகப்பு
ஈரோடு

பழனி கோயிலுக்கு ரூ.77.54 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 4:08 AM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2024 at 7:27 PM

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 4:08 AM

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,692 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

இதில் 60 கிலோ மூட்டைக்கு முதல்தரம் ரூ.2,730-க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.2,450-க்கும், அதிகபட்சமாக ரூ.2,520-க்கும், சராசரியாக ரூ.2,500-க்கும் ஏலம் போனது.

Advertisement

மொத்தம் 3,134 மூட்டைகள் 1,88,040 கிலோ எடையுள்ள கரும்பு சா்க்கரை ரூ.77 லட்சத்து 53 ஆயிரத்து 540-க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.