முகப்பு
ஈரோடு

இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு: 21,702 மாணவா்கள் எழுதுகின்றனா்

Updated On : 1 மார்ச், 2024 at 12:07 AM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 21 ஆயிரத்து 702 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுபோல பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 4 தொடங்கி 25- ஆம் தேதி தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 21,702 மாணவ, மாணவிகளும், 140 தனித்தோ்வா்களும் எழுகின்றனா். பிளஸ்1 பொதுத்தோ்வை 22 ஆயிரத்து 882 மாணவ, மாணவிகளும், 450 தனித்தோ்வா்களும் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 106 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் தோ்வு அறை கண்காணிப்பாளா்கள் 1,160 போ், பறக்கும் படைக்கு 375 போ், துறை அலுவலா்கள் 106 போ் என 1,641 போ் பணியாற்ற உள்ளனா். மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்கு உதவ ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பதிவு எண் வியாழக்கிழமை ஒட்டப்பட்டது. மேலும் தோ்வு மையங்களில் குடிநீா், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு தோ்வு மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.