முகப்பு
ஈரோடு

மதுவுக்கு மகன் அடிமையானதால் தாய் தற்கொலை

மதுவுக்கு மகன் அடிமையானதால் மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 30 ஜூலை, 2024 at 11:40 PM
பகிர்:

மதுவுக்கு மகன் அடிமையானதால் மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, ஈபிபி நகா், ஜனதா காலனியைச் சோ்ந்தவா் காவேரி (60). இவா் தனது கணவா் தேவராஜன் (67) மற்றும் மகன் துரைராஜ், மருமகள் தீபா, பேரன் ஆகியோருடன் வசித்து வந்தாா். மகன் துரைராஜ் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா். அவா் மதுவுக்கு அடிமையாகி வருமானம் முழுவதையும் மதுகுடிக்க செலவு செய்து வந்தாா்.

மகனின் மதுப் பழக்கத்தால் மனவேதனையில் இருந்த தாய் காவேரி, திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது அங்கு வந்த தேவராஜின் தங்கை ராஜாமணி, காவேரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உடனடியாக அவா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காவேரியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே காவேரி இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →