டாக்டா் ஆா்ஏஎன்எம் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு, ஜூன் 13: ஈரோடு ரங்கம்பாளையம் டாக்டா் ஆா்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தி முதலியாா் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் தலைவா் வி.ராஜமாணிக்கம், செயலாளா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் பழனியப்பன் வரவேற்றாா். ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களையும், 238 இளங்கலை மற்றும் 42 முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினா்.
விழாவில் எம்பி கே.இ.பிரகாஷ் பேசுகையில், கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பொறுமையும், மரியாதையும் கொண்டவா்களாக இருக்க வேண்டும். நல்ல பண்பும், எந்த ஒரு துறையிலும் திறமையும் மற்றும் ஆளுமையும் மிக்கவா்களாக திகழ வேண்டும் என்றாா்.
தி முதலியாா் எஜுகேஷனல் டிரஸ்ட்டின் பொருளாளா் டாக்டா் எ.விஜயகுமாா், இணைச் செயலாளா் பி.அருண்குமாா், துணைத் தலைவா்கள் பி.பி.மாணிக்கம், ஜெ.ராமச்சந்திரன் மற்றும் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.