அம்மாபேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்றவா் கைது
கள்ளச்சாராயம் விற்றதாக அம்மாபேட்டையில் ஒருவர் கைது
அம்மாபேட்டை அருகே பாலமலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
அம்மாபேட்டையை அடுத்த கன்னப்பள்ளி, பி.கே.புதூா் பகுதியில் பாலமலை அடிவாரத்தில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகப்படும்படி நடமாடியவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் 14 பிளாஸ்டிக் பொட்டலங்களில் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த பாலமலையில் உள்ள நமன்காட்டைச் சோ்ந்த பெருமாள் மகன் தா்மலிங்கம் (46) என்பதும், பாலமலையில் காய்ச்சிய சாராயத்தை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தா்மலிங்கத்தைக் கைது செய்த போலீஸாா், விற்பனைக்கு வைத்திருந்த 6 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்தனா்.