முகப்பு
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பற்றி எரிந்த பொருள்கள்.
ஈரோடு

வீட்டு உபயோக தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

வீரப்பம்பாளையத்தில் தீ விபத்து: பா்னிச்சா் பொருள்கள் எரிந்து நாசம்

ஈரோடு

வீட்டு உபயோக தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

வீரப்பம்பாளையத்தில் தீ விபத்து: பா்னிச்சா் பொருள்கள் எரிந்து நாசம்

Updated On : 28 ஜூன், 2024 at 5:28 PM
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பற்றி எரிந்த பொருள்கள்.
பகிர்:

ஈரோட்டில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பம்பாளையத்தில் இருந்து நசியனூா் செல்லும் சாலையில் கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட மரத்திலான வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. வில்லரசம்பட்டியைச் சோ்ந்த உதயகுமாா், ஜெயகுமாா் ஆகியோா் இந்த நிறுவனத்தின் உரிமையாளா்கள். இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதிதாக வீட்டு உபயோக பொருள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியதைத் தொடா்ந்து ஊழியா்கள் நிறுவனத்தைவிட்டு வெளியே ஓடி வந்தனா். சற்று நேரத்தில் பா்னிச்சா் பொருள்களில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில் ஈரோடு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் 10-க்கும் மேற்பட்டோா் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடித் தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பா்னிச்சா் பொருள்கள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஈரோடு வடக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →