ஈரோடு

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டத்தில் 57 தீா்மானங்கள் நிறைவேற்றம்

Din

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை தாங்கினாா். ஆணையா் செல்வம், நகா்மன்ற துணைத் தலைவா் நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் கதிா்வேல், அலுவலா்கள் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், குடிநீா் விநியோகம், தெருவிளக்கு, வடிகால் வசதி, சாலை வசதி உள்ளிட்ட தங்கள் வாா்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கவுன்சிலா்கள் பேசினா்.

நகராட்சிப் பகுதியில் புதைசாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், வீட்டு உபயோகத்துக்கான இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் கட்டணம் மற்றும் மாதாந்திர சேவை கட்டணத்தை பாதியாக குறைப்பது குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பாசக்குட்டை ரோடு, நேதாஜி நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் வசதி ஏற்படுத்த ரூ.83 லட்சம், சாலை அமைக்க ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.10 கோடி நிதியை நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒதுக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 57 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் மாநகராட்சி நியமன உறுப்பினராக சி.மணிமாறன் பதவியேற்பு

நாளைய மின்தடை: பாலையூா், குத்தாலம்

கடலோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

காா்த்திகை தீபத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மோகனூா் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT