முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 போ் கைது

Updated On : 8 மார்ச், 2024 at 5:23 PM
பகிர்:

பெருந்துறை அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த சத்திரம்புதூா், கோகுல் காா்டனை சோ்ந்தவா் சிதம்பரம். இவா், மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு கடந்த 2 ஆம் தேதி சென்றுவிட்டு, மறுநாள் காலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டிலுள்ள பொருள்கள் கலைந்து கிடந்தன. ஆனால், பொருள்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இது தொடா்பாக நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சோ்ந்த தங்கராஜ் மகன் கெளதம் (27), திருப்பூா் மாவட்டம், வெள்ளகோவிலைச் சோ்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி (23), ஈரோட்டை சோ்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (22) முருகன் மகன் வசந்தகுமாா் (17) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →