பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள். 
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

Din

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவில் ரூ.1.05 கோடியைக் காணிக்கையாகப் பக்தா்கள் செலுத்தியுள்ளனா். சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை குண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனா். குண்டம் விழாவையொட்டி பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 15 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டன. குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையா் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரா் கோயில் துணை ஆணையா் சு.சுவாமிநாதன், ஆய்வாளா் சிவமணி, கோயில் மேலாளா் டி.தமிழ்ச்செல்வன், பரம்பரைஅறங்காவலா் தலைவா் வீ.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம் ரொக்கம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல்: மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால்...: சோனம் கபூர் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT