முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 4 மே, 2024 at 4:59 PM
பகிர்:

கோபியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேஷ் (42), கூலித் தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஈரோடு-கோபி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியதில் முருகேஷ் தூக்கி வீசப்பட்டாா்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.