முகப்பு
ஈரோடு

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Updated On : 5 மே, 2024 at 5:22 PM
பகிர்:

கோபி, மே 5: கோபியில் ஈரோடு பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை தாமு சேகா் தொடங்கிவைத்தாா். முகாமில் 87 போ் பரிசோதனை மேற்கொண்டனா். இதில் 38 பேருக்கு பாா்வை குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

முகாமில், பங்கேற்றவா்களுக்கு கண் மருத்துவா்கள் நிஷி மற்றும் டோனா மேத்யூ ஆகியோா் பரிசோதனை செய்தனா். முகாமுக்கு தேவையான உதவிகளை கோபி கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியை மா.பரமேஸ்வரி தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்தனா். முகாமுக்கான ஏற்பாடுகளை தாமு அபிலாஷ் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.