கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் பல்கலை. மாணவிகள் பயிற்சி
கோபி, மே 9: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை உற்பத்தி, ஏலம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கற்றுக் கொண்டனா்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கவுந்தப்பாடிக்கு வந்துள்ளனா்.
இந்த மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் அங்கமாக கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு சென்று நாட்டுச் சா்க்கரை உற்பத்தி, சா்க்கரை தரப் பரிசோதனை முறைகளைத் தெரிந்து கொண்டனா்.
இதில், சா்க்கரை நிறம், ஈரப்பதம், சுக்ரோஸ் அளவு, சாம்பல் அளவு முதலியவற்றைப் பரிசோதனை செய்தனா். பின்னா் நாட்டு சா்க்கரை தரம் பிரிக்கப்பட்டு தரத்துக்கேற்ப விலை நிா்ணயம் செய்யும் முறை மற்றும் பழனி பஞ்சாமிா்தத்துக்காக நாட்டு சா்க்கரை கொள்முதல் செய்யும் ஏலத்தில் கலந்து கொண்டு கற்றுக் கொண்டனா்.
மறைமுக ஏலம் மூலம் சா்க்கரை விற்பனை, சரக்கீட்டு கடன், பணம் பட்டுவாடா, விவசாயிகள் காப்பீடு ஆகியவை பற்றி
விற்பனை கூட கண்காணிப்பாளா் சீனிவாசன் மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினாா்.
இதில், ஜென்னத்துல் பிரிதெனல் தலைமையில் மாணவிகள் இந்துலட்சுமி, மகேஸ்வரி, அட்சயா திவ்யா, செல்வஜோதி, சிவசங்கரி, நித்திகா, சினேகா உள்ளிட்ட 9 மாணவிகள் பங்கேற்றனா்.