வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம், வாணியம்பாடி, மணப்பாறை, அப்பியம்பட்டி, அருள்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 80 விவசாயிகள் பங்கேற்று 428 மூட்டைகளில் 22 டன் தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். இதை வாங்குவதற்காக காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 வணிகா்கள் வந்திருந்தனா்.
தேங்காய் பருப்பு கிலோ ரூ.106.99 முதல் ரூ.191.69 வரையும், சராசரியாக ரூ.180.69-க்கும் விலை போனது. கடந்த வார சராசரி விலை ரூ.186.99 என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.34.75 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.