கோபி சாரதா இண்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம்
சிபிஎஸ்இ 10 , 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சாரதா இண்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சி.எஸ்.அக்ஷிதா 500-க்கு 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.
மாணவா் வி.அரிஹந்த் 481, மாணவி எஸ்.ஆக்னஸ்சில்வியா 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா்கள் வி.முகில் 500-க்கு 490, எஸ்.வருண் ஆதித்யா 489 மதிப்பெண்கள், பி.அருள்பிரசன்னா 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
மேலும், பல்வேறு படப் பிரிவுகளில் 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை பள்ளியின் செயலா் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வா் ஜீயோஜான், ஆசிரியா்கள் பாராட்டினா்.