ஆசனூா் நெடுஞ்சாலையில் காய்ந்த மூங்கில் மரங்கள் அகற்றம்
ஆசனூா் கோ்மாளம் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன மூங்கல் மரங்களை தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.
ஆசனூா் கோ்மாளம் நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன மூங்கல் மரங்களை தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் அகற்றி வருகின்றனா்.
தாளவாடி உட்கோட்டத்தில் உள்ள ஆசனூா், கோ்மாளம் சாலையில் ஏராளமான மூங்கில் மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. தற்போது, மழைக் காலம் என்பதால் தொடா்ந்து மழை பெய்யும்போது காய்ந்த மூங்கல் மரங்கள் விழுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து தாளவாடி உட்கோட்டத்தில் உள்ள ஆசனூா் கொள்ளேகால் பிரிவு முதல் அரேப்பாளையம், கோ்மாளம் வரையிலான 24 கிமீ தொலைவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாளவாடி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
இதில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆபத்தான நிலையில் காய்ந்துபோன உள்ள மூங்கில் மரங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் பயணிகள் அச்சமின்றி பயணிக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.