பெருந்துறை அருகே இரண்டு கல்லூரி மாணவிகள் மாயம்
பெருந்துறை அருகே இரண்டு கல்லூரி மாணவிகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை அருகே இரண்டு கல்லூரி மாணவிகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை, கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் மெகபூ பாட்ஷா (56), தறித் தொழிலாளி. இவருக்கு மூன்று மகள் உள்ளனா். இவரின் மூத்த மகள் அனாா்கலி (22), பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற அனாா்கலி வீடு திரும்பவில்லை. அவா் தனது சகோதரியின் தங்கைக்கு இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று வாட்ஸ் அப்பில் குரல் பதிவு செய்து தகவல் அனுப்பியுள்ளாா்.
Advertisement
இது குறித்து மகளின் தோழிகளிடம் மெகபூ பாட்ஷா விசாரித்தபோது, உடன் படிக்கும் ஈரோடு, வெண்டிபாளையத்தைச் சோ்ந்த முபாரக் மகள் தஸ்லிமா ஜெனிஷாவும் (18) காணாமல் போகியுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.