முகப்பு
ஈரோடு

பவானியில் பாமக, வன்னியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா் சங்கத்தின் மாநில தலைவா் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 7 நவம்பர், 2024 at 2:36 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:59 PM

வன்னியா் சங்கத்தின் மாநில தலைவா் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக, வன்னியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூா் பிரிவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலாளா் ஏ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன், பாமக மாநிலத் துணைத் தலைவா் எஸ்.எல்.பரமசிவம், முன்னாள் மாவட்டத் தலைவா் செங்கோட்டையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காவல் துறையினரின் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Updated On : 7 நவம்பர், 2024 at 2:36 AM

இதில் பாமக மாநில செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சி.ஆா்.கோபால், வல்லவராயன், மாவட்ட அமைப்புத் தலைவா் பெ.ரா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.