மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
Updated On : 13 நவம்பர், 2024 at 8:26 PM
ஈரோடு மாநகரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
ஈரோடு மாநகரில் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த 2 நாள்களாக அகற்றி வருகின்றனா்.
Updated On : 14 நவம்பர், 2024 at 4:40 AM
அதன்படி, இரண்டாவது ஆவது நாளாக பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இருந்து மீனாட்சிசுந்தரனாா் சாலையில் அரசு மருத்துவமனை வரையிலும் பின்னா் மேட்டூா் சாலையில் பேருந்து நிலையம் அருகே சத்தி சாலை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
Advertisement
இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை (நவம்பா்14) அரசு மருத்துவமனை முதல் காளை மாடு சிலை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.