முகப்பு
ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க பூமிபூஜை

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 4:43 AM
மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்தியமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசிபி இளங்கோ, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 8:30 PM

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 4:43 AM

பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசிபி இளங்கோ, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் நவமணிகந்தசாமி, கோயில் ஆணையா் மேனகா, சிக்கசரம்பாளையம் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், பரம்பரை அறங்காவலா்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement