முகப்பு
ஈரோடு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ரூ.23.39 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

Updated On : 14 நவம்பர், 2024 at 4:50 AM
காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:
Updated On : 13 நவம்பர், 2024 at 9:32 PM

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது.

ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் உள்பட 21 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 14 நவம்பர், 2024 at 4:50 AM

இந்த உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையா் சுகுமாா் தலைமையில் புதன்கிழமை திறக்கப்பட்டு கோயில் ஊழியா்கள், வங்கிக் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களைக் கொண்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

Advertisement

இதில், ரூ.23,39,387 ரொக்கம், 61 கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் உதவி ஆணையா் அருள்குமாா், சத்தி ஆய்வாளா் சிவமணி, பண்ணாரி அம்மன் கோயில் கண்காணிப்பாளா் பாலசுந்தரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.