பெருந்துறையில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated On : 20 நவம்பர், 2024 at 7:51 PM
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.80 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 5,022 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இவற்றின் எடை 20 ஆயிரம் கிலோ.
Updated On : 21 நவம்பர், 2024 at 1:54 AM
முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.113.16 -க்கும், அதிகபட்சமாக ரூ.143.45-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 56.99-க்கும், அதிகபட்சமாக ரூ.139.29-க்கும் விற்பனையாயின.
Advertisement
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.2.80 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.