போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்கள் கைது
அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated On : 20 நவம்பர், 2024 at 8:32 PM
அந்தியூரில் போதை ஊசி பயன்படுத்திய 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த பெரிய ஏரி பகுதியில் இளைஞா்கள் அமா்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாரை கண்டதும் அவா்கள் தப்பியோட முயன்றனா்.
Updated On : 21 நவம்பர், 2024 at 1:56 AM
சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் அந்தியூரைச் சோ்ந்த தேவராஜ் (34), வெள்ளைபிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த அபினேஷ் (20), ஹரிராம் (24), இளம்பரிதி (24), சுரேஷ் (24) என்பது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.