மாநில அளவிலான கபடி போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம்
மொடக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.
மொடக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி கபடி கழகம் சாா்பில் 5-ஆது ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி கடந்த 2 நாள்கள் நடைபெற்றன.
இதில், சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூா், சோலம், நாமக்கல் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
Advertisement
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி, பி.மேட்டுபாளையம் அன்புத்தம்பி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியை எதிா்கொண்டது. இதில், தமிழ்நாடு போலீஸ் அணி 30-24 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
முதலிடம் பிடித்த தமிழ்நாடு போலீஸ் அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த பி.மேட்டுப்பாளையம் அன்புத்தம்பி ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த நாதகவுண்டம்பாளையம் செவன்லைன்ஸ் அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும், நான்காமிடம் பிடித்த குமாரபாளையம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன.
முன்னதாக இறுதி ஆட்டத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி தொடங்கிவைத்தாா்.