பவானியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் சாலை மறியல்
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Updated On : 21 நவம்பர், 2024 at 9:09 PM
பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
Updated On : 22 நவம்பர், 2024 at 4:45 AM
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு பவானி வழக்குரைஞா் சங்கத் தலைவா் சி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் ப.பா.மோகன், ஆண்டவா், குமரேசன், ப.மா.பாலமுருகன், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து, வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
Advertisement