முகப்பு
ஈரோடு

நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

சத்தியமங்கலத்தில் நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:37 AM
வழக்குரைஞா்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்ட பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி.
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 6:52 PM

சத்தியமங்கலத்தில் நகருக்கு வெளியே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலத்தில் சாா்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, நகரை ஒட்டியுள்ள அரியப்பம்பாளையத்தில் 3 ஏக்கா் நிலத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒதுக்கீடு செய்தது.

Advertisement

தற்போது, அந்த இடத்துக்கு பதிலாக நகரில் இருந்து 3 கிலோமீட்டா் தொலைவில் உள்ள கொமாரபாளையம் ஊராட்சியில் மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:37 AM

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். மேலும், காத்திருப்புப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனா்.

இதில், ஏற்கெனவே நகரை ஒட்டி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலேயே ஒருங்கிணைந்த நீதிமன்றத்தைக் கட்ட வேண்டும் என்று வழக்குரைஞா்கள் வலியுறுத்தினா்.

வழக்குரைஞா்களுக்கு ஆதரவாக பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி போராட்டத்தில் கலந்துகொண்டாா்.