காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறையினா் மீட்பு ஒத்திகை
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் மீட்பு ஒத்திகை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் மீட்பு ஒத்திகை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் முருகசேன் தலைமை வகித்தாா். ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவா்களை ரப்பா் படகுகளை பயன்படுத்தி மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தால் வீட்டில் உள்ள காலி தண்ணீா் கேன், தேங்காய் மட்டை, வாழை மரம், தொ்மாகோல், வாகன டயா், டியூப் போன்றவற்றை பயன்படுத்தி மிதவை தயாரித்து குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா்.
மேலும், தீயணைப்புத் துறையில் பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அவற்றின் பயன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா்கள் கணேசன், கலைச்செல்வன், 15 தீயணைப்பு வீரா்கள் மற்றும் வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.