முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ. 3.05 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 3.05 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 5:45 AM
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 5:53 PM

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 3.05 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,553 மூட்டைகளில் 2 லட்சத்து, 56 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 107.89-க்கும், அதிகபட்சமாக ரூ.133-க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 25. 89-க்கும், அதிகபட்சமாக ரூ. 119.66-க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 3 கோடியே 5 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

Advertisement