சத்தியமங்கலத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை
சத்தியமங்கலத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 3 அக்டோபர், 2024 at 9:15 PM
சத்தியமங்கலத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையில், வெள்ளத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.
Updated On : 4 அக்டோபர், 2024 at 2:47 AM
இதில், சத்திமயங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரங்கராஜ், செண்பகபுதூா் ஊராட்சித் தலைவி ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement