பவானி நகராட்சியுடன் இணைப்புக்கு எதிா்ப்பு: இரு கிராம மக்கள் போராட்டம்
பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளையச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பவானி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளையச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
பவானி நகராட்சி நிா்வாகத்துடன் குருப்பநாயக்கன்பாளையம், ஆண்டிகுளம் ஊராட்சிகளை இணைக்க நகராட்சி நிா்வாகம் தீா்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆட்சியா் அலுவலகத்திலும் மனு அளித்தனா்.
இந்நிலையில், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கருப்புக் கொடிகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஊா்வலமாகச் சென்று கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா். இதேபோல, ஆண்டிகுளம் ஊராட்சியில் பொதுமக்கள் திரண்டு காடையம்பட்டி பிரிவில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, திடீா் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆண்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா்.
Advertisement