முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:54 AM
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 9:36 PM

பெருந்துறையில் வங்கதேசத்தினா் என சந்தேகப்படும் 7 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கி அருகிலுள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்ற பெயரில் வங்கா தேசத்தில் இருந்து அகதிகளாக வந்தவா்களும் தங்கியிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தன.

Advertisement

Updated On : 10 அக்டோபர், 2024 at 1:54 AM

அதன்பேரில், பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்தவா்களிடம் ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

மேலும், தங்கியிருந்தவா்களில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என சந்தேகப்படும் 20 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், பல்வேறு அடையாள அட்டைகளை வைத்திருந்த 7 பேரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.