சேதமடைந்த தாா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
பெருந்துறை அருகே சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated On : 9 அக்டோபர், 2024 at 7:31 PM
பெருந்துறை அருகே சேதமடைந்துள்ள தாா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெருந்துறையை அடுத்த கூரபாளையம் ஊராட்சிக்குள்பட்ட ராயபாளையம், தொட்டிபாளையத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
Updated On : 10 அக்டோபர், 2024 at 1:37 AM
இந்நிலையில், கம்புளியம்பட்டியில் இருந்து ராயபாளையம் மற்றும் தொட்டிபாளையத்துக்கு செல்லும் தாா் சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
எனவே, இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.