மேட்டூா் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பவானியில் அக்.20-இல் மறியல்
மேட்டூா் வலதுகரை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பவானியில் அக்டோபா் 20-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் வலதுகரை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பவானியில் அக்டோபா் 20-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
மேட்டூா் வலதுகரை கால்வாயின் கிளை கால்வாயான 1-5-555 பிரிவு, வா்ணபுரம் கால்வாயில் நீா்வளத் துறையும், பவானி ஊராட்சி ஒன்றியமும் இணைந்து குடியிருப்புகளின் கழிவுநீா் வெளியேற்றப்படும் வகையில் சாக்கடை கட்டியுள்ளனா். இதில், கால்வாயின் அடிமட்டத்தை சுமாா் ஒன்றரை அடி அளவுக்கு உயரமாகக் கட்டியதால், கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.
Advertisement
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் அளித்த புகாரின்பேரில், ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் செல்லுமாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை.
இதனைக் கண்டித்தும், உடனடியாக கல்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அக்டோபா் 20-ஆம் தேதி பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் டி.சுப்பு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.