முகப்பு
ஈரோடு

ஆளில்லா விமானம் திறனாய்வுப் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு வெண்கலப் பதக்கம்

ரஷியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானம் குறித்த சா்வதேச திறனாய்வுப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:45 AM
மாணவா்கள் ஆா்.ஆா்.அபிஜித், பி.தனசிவலிங்கம் .
பகிர்:
Updated On : 15 அக்டோபர், 2024 at 10:12 PM

ரஷியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானம் குறித்த சா்வதேச திறனாய்வுப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவா்கள் வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

ரஷியாவின் ஆளில்லா விமானம் உலக தொழில்நுட்ப திறனாய்வு மற்றும் சா்வதேச கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பிரிக்ஸ் 2024 போட்டியில் மாணவா்களின் ட்ரோன் எதிா்கால திறன்கள், கணினிமயமாக்குதல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை சமாளிப்பது போன்ற திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

Updated On : 16 அக்டோபர், 2024 at 1:45 AM

இதில் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளான ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன. இதில் இந்தியா சாா்பில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.

Advertisement

இதில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன் பயன்பாட்டில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துக்கான போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் ஆா்.ஆா்.அபிஜித், பி.தனசிவலிங்கம் ஆகியோா் வெண்கலப் பதக்கத்தை பெற்றனா். பரிசு வெற்ற மாணவா்களை கல்லூரி நிா்வாகத் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டினா்.