முகப்பு
ஈரோடு

கோபி அருகே மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:46 AM
கோபி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யானை.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 8:34 PM

கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப் பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் இருந்து உணவு, குடிநீருக்காக வெளியேறும் யானைகள் அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து வீடுகளையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:46 AM

இந்நிலையில், கோபியை அடுத்த பங்களாபுதூரில் தனியாா் பொறியியல் கல்லூரிக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வந்த ஆண் யானை, அருகிலுள்ள விவசாய நிலம் மற்றும் கல்குவாரிக்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனத் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.