முகப்பு
ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.36.39 லட்சம் உண்டியல் காணிக்கை

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ. 36.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:57 AM
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 7:14 PM

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ. 36.39 லட்சம் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை ஈரோடு மாவட்ட துணை ஆணையா் தா.நந்தகுமாா் தலைமையில், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், பெருந்துறை சரக கோயில் ஆய்வாளா் அ.ஸ்ரீகுகன், அயல் பணி ஆய்வாளா் சி.மாணிக்கம் ஆகியோா் முன்னிலையில் கோயில்களில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 2:57 AM

இதில், ரூ. 36 லட்சத்து 39 ஆயிரத்து 378 ரொக்கம், 51 கிராம் தங்கம், 1095 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Advertisement

காணிக்கை எண்ணும் பணியில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க பணியாளா்கள், அரச்சலூா் நவரசம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் அா்ச்சகா்கள் ஈடுபட்டனா்.